தொழிலதிபர்களுக்காக மட்டுமே செயல்படுகிறதா இந்தியா...ராகுல் காந்தி கூறுவதென்ன?!!

அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இருவரும் கட்சிக்கு மதிப்புமிக்க சொத்துகள்.   இந்திய ஒற்றுமை பயணத்திற்கு ராஜஸ்தானில் பெரும் வரவேற்பு கிடைக்கும். 

தொழிலதிபர்களுக்காக மட்டுமே செயல்படுகிறதா இந்தியா...ராகுல் காந்தி கூறுவதென்ன?!!

ராஜஸ்தானின் அரசியல் நடவடிக்கைகள் இந்திய ஒற்றுமை பயணத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் பயணம் தொடரும் போது ஆதரவு அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

செய்தியாளர் சந்திப்பு:

மத்திய பிரதேசத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது ​​ராஜஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பம் குறித்து, கட்சித் தலைமை கவனித்து வருவதாகக் கூறியுள்ளார் ராகுல்.  கெலாட் மற்றும் பைலட் இருவரும் எங்களுக்கு சொத்துக்கள் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும் எனவும் இந்திய ஒற்றுமை பயணம் ராஜஸ்தானுக்கு செல்லும் போது, ​​அதற்கு இன்னும் பெரிய வரவேற்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார் ராகுல்.

பெயருக்கு களங்கம்:

எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க பாஜக பல கோடி ரூபாய் செலவிட்டுள்ளது  என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.  என் இமேஜை கெடுக்க பாஜக எவ்வளவு பணம் செலவழிக்கிறதோ, அந்த அளவுக்கு எனக்கு அதிகாரம் கிடைக்கும். இத்தகைய தாக்குதல்கள் எனக்கு குரு. நான் சரியான திசையில் செல்கிறேன் என்பதை இது எனக்கு உணர்த்துகிறது.  

இது எனக்கு தீங்கு விளைவிக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள் எனவும் ஆனால் அதற்குப் பிறகு, இன்னும் அதிகமாக பலனளிப்பதாக உணர்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார் ராகுல்.  உண்மை என்னிடமே உள்ளது எனவும் அதை யாராலும் மறைக்க முடியாது எனவும் கூறியுள்ளார் ராகுல்.  

பயமாக இருந்தது:

இதுவரை நீங்கள் இரண்டாயிரம் கி.மீ.க்கு மேல் நடந்துள்ளீர்கள்.  இந்த நேரத்தில் உங்களுக்கு எந்த தருணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது? என கேள்வியெழுப்பினர். 

இந்த கேள்விக்கு பதிலளித்த ராகுல், இந்த பயணம் பத்து ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது எனவும் எனக்கு 25-26 வயது இருக்கும் போதே இந்த பயணத்தை நடத்த நினைத்தேன் எனவும் பயணத்தின் போது, ​​பழைய முழங்கால் காயத்தில் மீண்டும் வலி எழுந்தது எனவும் கூறியுள்ளார்.  என்னால் நடக்க முடியுமா என்பது பயமாக இருந்தது ஆனால் அந்த பயத்தை வென்று பயணத்தை மேற்கொண்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார். 

பிரச்சினைக்கான தீர்வு:

வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்குவதற்கான வழி என்ன என்று ராகுலிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராகுல் வேலையில்லாத் திண்டாட்டமும் பணவீக்கமும் நம் நாட்டில் உள்ள பிரச்சினைகளில் உள்ள ஒன்றுதான் எனக் கூறிய அவர் ஆனால் அதை எப்படி நீக்க முடியும் என்ற கேள்விக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்க, சிறிய துறைகளில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பதிலளித்தார். 

தொழிலதிபர்கள் கையில்:

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகள் மற்ற துறைகளின் சுமையை அதிகரித்துள்ளன எனவும் இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் மொத்தத்தில், இரண்டு மூன்று பெரிய தொழிலதிபர்கள் மட்டுமே அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள் எனவும் இந்த நிறுவனங்கள் ஒவ்வொரு துறையிலும் ஏகபோகத்தை உருவாக்குகின்றன எனவும் இதற்கு விரைவில் முடிவுகட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   சுயநலமான சீனா...பாடம் கற்பிக்க நினைக்கும் கனடா...உதவுமா இந்தியா!!!