பருவநிலை மாற்றம் மற்றும் வர்த்தகங்களை சீர்குலைக்கும் சீனாவைச் சமாளிக்க கனடா புதிய இந்திய-பசிபிக் தீர்ப்பாயத்தை அறிமுகப்படுத்தியது.
சீனாவை தடுக்கும் உத்தி:
ஜி-20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடந்த விவாதத்திற்குப் பிறகு, கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ, சீனாவின் தந்திரங்களை முறியடிக்க புதிய இந்தோ-பசிபிக் உத்தியைத் தயாரித்துள்ளார். இதன் கீழ், பருவநிலை மாற்றம் மற்றும் வர்த்தக விவகாரங்களில் சீனாவின் மிரட்டலை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ட்ரூட்டோ கூறியுள்ளார்.
அவர் தயாரித்த 26 பக்க ஆவணத்தில், இந்தோ-பசிபிக் பகுதியில் இராணுவப் பலத்தை அதிகரிப்பதாகவும், அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்க முதலீட்டு விதிகளை கடுமையாக்குவதாகவும் கனடா தெரிவித்துள்ளது. கூடுதலாக, இது சீன அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் முக்கிய கனிம விநியோகத்தை தடுத்து நிறுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சுயநலமான சீனா:
தொடர்ந்து அந்த அறிக்கையில் சீனா மற்ற நாடுகளின் விவகாரங்களில் எல்லா நேரத்திலும் தலையிடுகிறது எனவும் அதனுடைய சொந்த நலனுக்காக மற்ற நாடுகளை கையாள முயற்சிக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தோ-பசிபிக் பகுதிகளில் சீனாவின் மேலாதிக்கத்தை எதிர்கொள்ள கனடா உளவுத்துறை மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளில் முதலீடு செய்யப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
இந்தியாவின் நிலைப்பாடு:
கனடா பிரதமர் இது குறித்து இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்தியா இது தொடர்பாக இதுவரை அதனுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கவைல்லை எனத் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட உறவு:
2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கனடா போலீஸாரால் சீனாவின் Huawei டெக்னாலஜிஸ் நிர்வாகியை கைது செய்யப்பட்ட பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தது.
அதற்கு பழிவாங்கும் விதமாக பெய்ஜிங் 2018 ஆம் ஆண்டிலேயே உளவு குற்றச்சாட்டில் இரண்டு கனடர்களை கைது செய்தது. கைது செய்யப்பட்ட அனைவரும் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்ட பின்னரும் உறவுகள் இதுவரையிலும் மோசமாக உள்ளன.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ”குறைந்தபட்சம் உங்கள் டீயையாவது......” காங்கிரஸ் தலைவர் கார்கே!!!