"உங்களுக்கு ராவணனைப் போல 100 தலைகள் இருக்கிறதா?" மோடி அளித்த அல்ட்டிமேட் பதில்!!!

"உங்களுக்கு ராவணனைப் போல 100 தலைகள் இருக்கிறதா?" மோடி அளித்த அல்ட்டிமேட்  பதில்!!!
Published on
Updated on
1 min read

குஜராத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு குஜராத்தின் கலோலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

காங்கிரஸ்- பாஜக மோதல்:

குஜராத்தில் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு கலோலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்.  அப்போது காங்கிரஸை கடுமையாக தாக்கி பேசிய பிரதமர் மோடி காங்கிரஸின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ‘ராவணன்’ அறிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.  

ராவணனா?:

கட்சிக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​அகமதாபாத்தின் பெஹ்ராம்புரா பகுதியில் நடந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் மோடியை ராவணன் என்று வர்ணித்துள்ளார்.  'வேறு யாரையும் பார்க்க வேண்டாம், மோடியைப் பார்த்து வாக்களியுங்கள்' என தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக தரப்பில் பேசப்பட்டிருந்தது.  

அதை விமர்சிக்கும் விதமாக “உங்கள் முகத்தை எத்தனை முறை பார்க்க வேண்டும்? உங்களிடம் எத்தனை வடிவங்கள் உள்ளன? உங்களுக்கு ராவணனைப் போல 100 தலைகள் இருக்கிறதா?” எனக் கேட்டிருந்தார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.

ராம பக்தர்களின்..:

கார்கே விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக “என்னை யார் எந்த அளவுக்கு துஷ்பிரயோகம் செய்ய முடியும் என்பதில் காங்கிரசில் போட்டி நிலவுகிறது.  நான் கார்கே அவர்களை மதிக்கிறேன்.  என்ன சொல்ல முடியுமோ அதைத்தான் அவரால் சொல்ல முடியும்.  

இது ராம பக்தர்களின் குஜராத் என்பது காங்கிரஸ் கட்சிக்கு தெரியாது போலும்.  ராமரின் பக்தர்கள் நிறைந்த இந்த நாட்டில், என்னை 100 தலைகள் கொண்ட ராவணன் என்று அழைக்கும்படி கார்கேவிடம் கேட்கப்பட்டுள்ளது.  அதை அவர் செய்துள்ளார்” என மோடி பேசியுள்ளார். 

கலங்கும் காங்கிரஸ்:

தொடர்ந்து பேசிய மோடி, “குஜராத் எனக்கு கொடுத்த அதிகாரம் இந்த காங்கிரஸ்காரர்களை கலங்க வைத்துள்ளது.  உங்கள் ஐந்து விரல்களும் நெய்யில் இருந்தால், ஒரு விரலால் தாமரை பட்டனை அழுத்த வேண்டுமா இல்லையா?.  நான் குஜராத்தின் மகன், நீங்கள் கொடுத்த குணங்கள், குஜராத் எனக்கு அளித்த அதிகாரம் இந்த காங்கிரஸ்காரர்களை கலங்க வைக்கிறது.” எனக் கூறியுள்ளார்.
 
தாமரை மலரும்:

காங்கிரஸ்ஸிற்கு சவால் விடும் விதமாக பேசிய மோடி, “நீங்கள் எவ்வளவு சேற்றை வீசுகிறீர்களோ, அவ்வளவு தாமரை இங்கு மலரும்.  காங்கிரஸ் நண்பர்கள் திறந்த காதுடன் கேட்க வேண்டும்.  உங்கள் ஜனநாயகத்திற்கான பொருள் உங்கள் குடும்பத்திற்காக வாழ விரும்புவதே.  ஆனால் ஒன்று, எவ்வளவு சேற்றை வீசுகிறீர்களோ அவ்வளவு அதிகமாக தாமரை மலரும்.” என்று காங்கிரஸ்ஸிற்கு பதிலளித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com