”அவள் 35 துண்டுகள் நீ 70 துண்டுகள்” தொடரும் கொலை மிரட்டல்கள்!!!

”அவள் 35 துண்டுகள் நீ 70 துண்டுகள்” தொடரும் கொலை மிரட்டல்கள்!!!

லிவ்-இன் பார்ட்னரின் துன்புறுத்தலால் சோர்வடைந்துள்ளதாக புகார் அளித்த பெண்.  விருப்பப்படி செயல்படாவிட்டால் 70 துண்டுகளாக வெட்டிவிடுவேன் என மிரட்டல்.

அஃதாப் -ஷ்ரத்தா:

மகாராஷ்டிராவில் வசித்து வந்த ஷ்ரத்தா  அவரது லிவ்-இன் துணையான அஃப்தாப் அமீன் பூனாவாலாவால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக வெட்டப்பட்டார்.  இந்தப் படுகொலையானது தற்போது அனைவராலும் மிரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்டு தவறான முன்னுதாரணமாக மாறி வருகிறது. 

மிரட்டல்:

டெல்லியில் ஷ்ரத்தா வாக்கரின் இதயத்தை உலுக்கும் கொலையில் இருந்து பாடம் கற்பதற்குப் பதிலாக, சிலர் அதை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சூழல் உருவாகி வருகிறது.   இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது மகாராஷ்டிர மாநிலம் துலேயில் வசிக்கும் ஒரு பெண்,  லிவ்-இன் துணையால் கொலை மிரட்டல் விடப்படுவதாக கூறியுள்ளார்.   

நடந்தது என்ன?:

மகாராஷ்டிராவின் துலே போலீசில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், அர்ஷத் என்ற நபர் தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.  மேலும் இருவரும் ஜூலை 2021 முதல் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.  

அந்த பெண் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாய் என்பது அவரது வாக்குமூலத்திலிருந்து தெரிகிறது.  அதனுடன் அவரது கணவர் விபத்து ஒன்றில் இறந்த பிறகு அர்ஷத் நபருடன் வாழ்ந்து வருவதாகவும் புகாரில் கூறியுள்ளார்.

மிரட்டலுடன் தொடங்கிய உறவு:

இவர்கள் இடையேயான உறவு மிகவும் சுமூகமான முறையில் தொடங்கவில்லை.   துலேயில் உள்ள லாலிங் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு புகார் அளித்த பெண்ணை அர்ஷத்அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.  மேலும் அதை வீடியோ எடுத்து வைத்திருந்த அர்ஷத் அதை வைத்து மிரட்டல் செய்ய தொடங்கியுள்ளார்.  

இதையடுத்து இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.   அது முதல் ஜூலை 2021லிருந்து இருவரும் மகாராஷ்டிராவின் அமல்னருக்குச் சென்று, அங்கு லிவ்-இன் உறவில் வாழ்வதற்கான உறுதிமொழிப் பத்திரத்தைத் தயாரித்து ஒன்றாக வாழ தொடங்கியுள்ளனர்.

கட்டாய மத மாற்றம்:

குழப்பத்திலும் மிரட்டலிலும் தொடங்கிய இவர்களது உறவு சுமுகமாக செல்லவில்லை.  பல இன்னல்களை அனுபவித்த பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டப்பட்ட அர்ஷத் தன்னை வலுக்கட்டாயமாக மதம் மாற்றியதாக கூறியுள்ளார்.  மகனையும் மதம் மாற்ற முயன்றதாகவும் அப்போது எழுந்த சண்டையில்  'ஷ்ரத்தா 35 துண்டுகளாக தான் வெட்டப்பட்டாள் ஆனால் நான் உன்னை 70 துண்டுகளாக வெட்டுவேன்' என்று தான் அந்த நபரால் மிரட்டியதாக காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    26/11 தாக்குதல்...உண்மையில் நடந்தது என்ன...வாயை திறந்த அப்போதைய செயலாளர்!!!