ஆளுநர் உரையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது -ஆளுநர் உரை கேட்கதான் வந்தோம் - எதிர்க்கட்சி தலைவர்

தமிழக சட்டசபையில் இருந்து ஆளுநர் உரை கேட்டுவிட்டு வந்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் உரையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது எனவும் பேசினார்.

ஆளுநர் உரையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது -ஆளுநர் உரை கேட்கதான் வந்தோம் - எதிர்க்கட்சி தலைவர்

ஆளுநர் உரை என்பது ஆண்டுதோறும் அரசு செய்யக்கூடிய விசயங்களை சட்டப்படி முறைப்படி அறிவிக்கும் ஒரு உரை.ஆனால் ஆளுநர் உரையில் கடந்த ஆண்டை போலவே நீண்ட திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை ஆனால் இந்த திமுக அரசு தற்புகழ்ச்சி தங்கள் முதுகுகளில் தாங்களே தட்டி கொள்கிறார்கள் என்ற பொதுமக்களின்  குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் இன்றைய தினம் சற்று வித்தியாசமாக தங்கள் முதுகை தாங்களே தட்டி கொள்ளும் முறையே தான் செய்திருக்கிறார்கள்.

மேலும்படிக்க | 
ஆளுநரின் நடவடிக்கைகள் ஆர் எஸ் எஸ் முகத்தை காட்டுகிறது தொல். திருமாவளவன் காட்டம்

ஆளுநர் உரையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.ஆளுநர் உரை வெற்று உரையாக உள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டு ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும் ஆனால் அது ஆளுநருக்கு தான் தெரியும் அனுமதி அளித்தாரா இல்லை என்று. நாங்கள் ஆளுநர் உரை மட்டுமே கேட்க வந்தோம், முதலமைச்சர் உரை கேட்க வரவில்லை.ஆளுநரை அமர வைத்துகொண்டு ஒரு முதலமைச்சர் பேசுவது மரபுக்கு எதிரானது. அநாகரிமானது. 

மேலும் படிக்க | தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்காமல் ஆளுநர் வெளியேறியது அநாகரிகம் - அமைச்சர்


தமிழ்கத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சரிந்துவிட்டது. சட்ட ஒழுங்கு சீர்க்கெட்டுவிட்டது கொலை கொள்ளை வழிப்பறி போதை பொருள் தடை இன்றி கிடக்கிறது. அப்படிபட்ட ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது.