ரவுடிகள் போல் செயல்படும் திமுக அமைச்சர்கள்...அராஜக ஆட்சி நடத்துவதாக குற்றச்சாட்டு!

ரவுடிகள் போல் செயல்படும் திமுக அமைச்சர்கள்...அராஜக ஆட்சி நடத்துவதாக குற்றச்சாட்டு!

திமுக அமைச்சர்கள் ரவுடிகளைப் போல் கற்களை எடுத்துக் கொண்டு அராஜக ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாக முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை ராயபுரத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பேரணியில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திக்கு தெரியாத காட்டில் சிக்கி தவிப்பது போல் ஓ பன்னீர் செல்வம், சசிகலா,  தினகரன் ஆகிய மூவரும் தவித்து வருவதாக கூறினார். 

இதையும் படிக்க : அடுத்த 5 ஆண்டுகளில் 12 பில்லியன் டாலர் வர்த்தகமாக உயர்த்த முடிவு...!

தொடர்ந்து பேசியவர், தற்போது இருக்கும் அதிகாரிகள் ஆளும் கட்சிகளுக்கு துதிப்பாடும் நிலைமை இருந்து வருவதாகவும், எதிர்காலத்தில் அதற்கு எல்லாத்திற்கும் பதில் சொல்லக்கூடிய நிலைமை ஏற்படும் எனவும் கூறினார். தமிழக ஆளுநரையே இலக்காரமாக பேசக்கூடிய ஆட்சியை தான் இந்த ஆளும் கட்சி நடத்தி வருவதாகவும், தற்போது இருக்கும் அமைச்சர்கள் எல்லாம் ரவுடிகளை போல் கற்களை கையில் எடுத்துக் கொண்டு அராஜக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் எனவும் குற்றச்சாட்டினார்.

முன்னதாக, திருவள்ளூரில் இன்று நடைபெறவிருந்த மொழிப்போர் தியாகிகள் தின பொதுக்கூட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், திமுக நிர்வாகி ஒருவர் நாற்காலி கொண்டு வருவதற்கு தாமதித்ததால், கீழே கிடந்த கல்லை எடுத்து அவர் மீது தூக்கி வீசியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில், இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது தக்க பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.