சென்னையில் போதைபொருள் விற்றவருக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம்.......

சென்னையில் போதைபொருள் விற்றவருக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம்.......
Published on
Updated on
1 min read

சென்னையை அடுத்த கண்ணகி நகரில் கஞ்சா விற்ற இளைஞருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு  வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையை அடுத்த கண்ணகி நகர் பேருந்து நிலையம் பின்புறம் கஞ்சா விறகப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர்,  அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவரை கைது செய்தனர். 

அவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை  போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த,  போதைப்பொருள் கடத்தல் தடுப்பு  வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமகள், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழரசனுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும்,   ஐம்பதாயிரம் ரூபாய் அபாரமும் விதித்து தீர்ப்பளித்தார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com