”கருணாநிதி 4ம் நம்பரில் தலை வைத்தார் ஆனால் ரெயிலோ 5ம் நம்பர் தண்டவாளத்தில் வந்தது” முன்னாள் அமைச்சர் கிண்டல் பேச்சு!!!

”கருணாநிதி 4ம் நம்பரில் தலை வைத்தார் ஆனால் ரெயிலோ 5ம் நம்பர் தண்டவாளத்தில் வந்தது” முன்னாள் அமைச்சர் கிண்டல் பேச்சு!!!

ஒரு கட்சியுடன் கூட்டணி என்பதால் அதிமுகவை எதிரியாக சிறுபான்மை மக்கள் பார்க்க கூடாது முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வம் பேச்சு

பொதுக்கூட்டம்:

சென்னையை அடுத்த ஆலந்தூரில் சென்னை புறநகர் அதிமுக மாணவர் அணி சார்பில் வீரவணக்க நாள் பொது கூட்டம் நடைபெற்றது.  இதில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வம் பேசுகையில்  ,தமிழுக்காக தொண்டு செய்தேன் என சொல்லும் அவர்கள் என்ன செய்தார்கள் எனக் கேள்வெயெழுப்பியுள்ளார்.  

தமிழுக்காக தண்டவாளத்தில்:

மேலும் ஒரு காலத்தில் தமிழுக்காக தண்டவாளத்தில் தலை வைத்து கருணாநிதி படுத்தார் என்பதை மறுக்க முடியாது எனக் கூறிய வைகை செல்வன் அவர் 4ம் நம்பரில் தலை வைத்தார் ஆனால் ரெயிலோ 5ம் நம்பர் தண்டவாளத்தில் வந்தது எனக் கிண்டலாக கூறியுள்ளார்.  

கண்டிக்காத முதலமைச்சர்:

தொடர்ந்து பேசிய அவர் உதயநிதி துணை முதலமைச்சர் போல் பணியாற்றுவதாக பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளதை தெரிந்தும் இதை முதலமைச்சர் கண்டிக்காமல் இருப்பது சரியா எனக் கேட்டுள்ளார்.  மேலும் திமுகவின் குடும்ப அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க உள்ளனர் எனவும் அண்ணா முதலமைச்சர் பதவி ஏற்க வந்தபோது அவரது மனைவி வர விரும்பிய போது குடும்பத்தையும் நாட்டையும் ஒன்றாக இணைக்க கூடாது எனத் தெரிவித்துள்ளார்.  

தோழனாக இருப்போம்:

மேலும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பானவர்கள் அதிமுக எனவும் திமுகவை நம்ப கூடாது எனவும் கூறிய அவர் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து உள்ளோம் எனக் கூறியுள்ளார்.  அதனோடு அதிமுகவை சிறுபான்மை மக்களுக்கு எதிரியாக பார்க்க கூடாது எனவும் தோழனாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    பாஜக கொடிக் கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றியதால் சர்ச்சை.......