திருநீற்று புதனை கொண்டாடும் கிறிஸ்தவர்கள்...!

திருநீற்று புதனை கொண்டாடும் கிறிஸ்தவர்கள்...!
Published on
Updated on
1 min read

திருநீற்று புதனை முன்னிட்டு சாந்தோம் தேவாலயத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர்.

உலகம் முழுவதும்  கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் இன்று  திருநீற்றுப் புதன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  திருநீற்று புதன் என்பது கிறிஸ்தவ மதத்தில் தவக்காலத்தை வரவேற்கும் தொடக்க நாளாகும்.  இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து உயிரிழந்ததை நினைத்து வருந்தும் வகையில் இந்த 40 நாட்களை நோன்பிருந்து அனுசரிக்கின்றனர்.

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணிற்கு திரும்புவாய் என்பதை உணர்த்தும் வகையிலும் தங்களுடைய பாவங்களை நினைத்து மனம் வருந்த வேண்டும் என்பதற்காக குருத்தோலைகளை எரித்து அந்த சாம்பலினை தங்களது நெற்றியில் பூசி இந்த தினத்தை அனுசரிக்கின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் காலை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் பங்கேற்றனர். 

மேலும் தவக்காலத்தை வரவேற்கும் வகையில் இன்று தங்களுடைய நெற்றிகளில் திருநீறு பூசி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com