சராசரி நாட்களை விட இரண்டு மடங்கு கூடுதல் ஆக விலை நிர்ணயித்திருப்பதாக கட்சிக்காரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பக்கம் திரும்பி இருக்கிறது.
திமுக, அதிமுக, தேமுதிக. நாம் தமிழர், காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சியை சேர்ந்த தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை ஈரோட்டில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் ஈரோட்டில் முகாமிட்டுள்ளதால் இதனை பயன்படுத்தி ஹோட்டல் உரிமையாளர்களும் விடுதி உரிமையாளர்களும் கல்லா கட்டி வருகின்றனர்.
ஈரோடு மாநகர் பகுதியில் மொத்தமாகவே 50 - 70 தங்கும் விடுதிகள் மட்டுமே இருக்கிறது. தேவை அதிகரித்து இருப்பதால் விலை கூடுதலாக இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள்.
சராசரி நாட்களில் குளிரூட்டப்பட்ட அறைக்கு ஒரு நாள் வாடகை 500 லிருந்து 800 ரூபாய் என இருந்தது. ஆனால் இப்போது 1500 லிருந்து 2000 ரூபாயக நிர்ணயித்து இருக்கின்றனர். மேலும் குளிரூட்டபடாத அறையும் இரண்டு மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல அசைவ உணவுகளுக்கான தேவையும் அதிகரித்து இருக்கிறது. தேர்தல் பணிமனைகளில் பணியாற்றுவோருக்கு மொத்தமாக பிரியாணி பொட்டலங்கள் விநியோகிக்க படுகிறது. இதன் காரணமாக அசைவ உணவகங்களில் உணவு வாங்கவும் கூட்டம் அலைமோதுகிறது. இந்த காரணத்தால் அசைவ உணவுகளின் விலையும் கூடுதலாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இதையும் படிக்க: சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்ற இசைப்புயல் ரஹ்மான்!!