பிள்ளை வரம் வேண்டி நேர்த்திகடன்...அதுவும் முக்கியமான நாளில்!

பிள்ளை வரம் வேண்டி நேர்த்திகடன்...அதுவும் முக்கியமான நாளில்!

திருவண்ணாமலை தேர் திருவிழாவில், கரும்பு தொட்டில் கட்டி குழந்தைகளை தோளில் சுமர்ந்து பெற்றோர்கள் நேர்திகடன் செலுத்தினர்.

தீபத்திருவிழா:

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு திருவண்ணாமலையில் கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்தியை தீப திருவிழா தொடங்கியது.

இதையும் படிக்க: 2000 கன அடியாக உயர்ந்த அணையின் நீர்வரத்து...!

நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்:

இந்த தீபத் திருவிழாவின் முக்கிய விழாவான ஏழாம் நாளில் பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டம் நடைபெறுவது  வழக்கம். அதன்படி, இன்று நடைபெற்ற மகா தேரோட்டத்தில், பல்வேறு பக்தர்கள் பங்கேற்று தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டியும், குழந்தைகள் உடல்நலம் சீராக இருக்க வேண்டியும், கரும்பில் தொட்டில் கட்டி, தங்கள் குழந்தைகளை சுமந்தபடி மாட வீதியில் வலம் வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.