2000 கன அடியாக உயர்ந்த அணையின் நீர்வரத்து...!

2000 கன அடியாக உயர்ந்த அணையின் நீர்வரத்து...!

முல்லைப் பெரியாறு அணைக்கு மழை காரண மாக நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

குடிநீருக்கு ஆதாரம்:

தமிழக - கேரள எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணை, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீருக்கு ஆதார மாக திகழ்கிறது.

பரவலாக பெய்து வரும் மழை:

இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சிவகிரி மலைத்தொடர், முல்லையாறு, முல்லைக்கொடி தாண்டிக்கொடி, ஆகிய  பகுதிகளில் தொடர்ந்து பரவலான மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதையும் படிக்க: லிஃப்டில் செல்ல... மா.சுப்பிரமணியனை கிண்டல் செய்யும் தமிழிசையின் பேச்சு...!

நீர்வரத்து அதிகரிப்பு:

நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 688 கன அடியாக இருந்த நிலையில், இன்று நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 139 அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 511 கன அடியாகவும் உள்ளது.