சிறந்த விற்பனையாளர் vs சிறந்த ஒப்பந்தக்காரர்...!!!காங்கிரஸ் vs ஆம் ஆத்மி!!!

சிறந்த விற்பனையாளர் vs சிறந்த ஒப்பந்தக்காரர்...!!!காங்கிரஸ் vs ஆம் ஆத்மி!!!
Published on
Updated on
2 min read

குஜராத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் ஆம் ஆத்மி  தொடர்ந்து காங்கிரஸை விமர்சித்து வருகிறது.  இனி வரும் தேர்தல்களில் காங்கிரசுக்கும் ஒரு வாக்கு கூட கிடைக்காது எனவும் காங்கிரசிலிருந்து பலர் ஏற்கனவே விலைகி வருகின்றனர்.  கூடிய விரைவில் காங்கிரசின் அனைத்து உறுப்பினர்களும் பாஜகவிற்கு சென்று விடுவர் என்றும் கூறி வந்தார்.  இந்நிலையில் கோவா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.  இதனைக் குறித்து கிண்டலடித்துள்ளார் கெஜ்ரிவால்.

பாஜகவில் இணைந்த எம்.எல்.ஏக்கள்:

காங்கிரஸிலிருந்து மூத்த தலைவர்கள் மட்டுமே தொடர்ந்து பதவி விலகி வந்த நிலையில் தற்போது தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் காங்கிரஸிலிருந்து விலகியதோடு நில்லாமல் பாஜகவோடு இணைந்தும் உள்ளனர். ” அன்பு வெறுப்பை வெல்லும். நம்பிக்கை பயத்தை வெல்லும். ஒன்றாக, நாம் வெல்வோம்.” என்றுகூறி இந்தியாவை ஒன்றிணைக்கும் ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் ஈடுபட்டுள்ள வேளையில் உண்மையான ஒற்றுமை கோவாவில் தான் நடந்துள்ளது என பிரமோத் சாவன் விமர்சித்துள்ளார்.

கிண்டலடித்த கெஜ்ரிவால்:

கோடிகளை அளித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.  எனது கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சித்தது.  ஆனால் அது நடக்கவில்லை.  காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விலை போய்விட்டனர்.  பரிதாபத்துக்குரிய நிலை என்றாலும் காங்கிரஸ்ஸின் இந்த நிலைக்கு காங்கிரஸ் தான் காரணம்” என கிண்டலடித்துள்ளார் கெஜ்ரிவால்.

அதோடு நில்லாமல் ஆம் ஆத்மியின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தின் புகைப்பட ஏலக் காட்சியை எடிட் செய்து ராகுல் காந்தியே அவரது கட்சியின் எம்.எல்.ஏக்களை ஏலம் விடுவதாகவும் அதிகம் பேர் ஏலம் கேட்பதாகவும் இறுதியாக அமித் ஷா அதிக விலைக்கு ஏலம் எடுப்பதாகவும் அந்த வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது.  பத்து ஆண்டுகளின் சிறந்த விற்பனையாளர் காங்கிரஸ் என்ற தலைப்புடன் காங்கிரஸ் விற்கப்பட்டது என்ற ஹாஸ்டாக்குடன் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

புதிய மதுபானக் கொள்கை:

டெல்லி அரசாங்கம் மாநிலத்தில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதன் கீழ், 32 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் அதிகபட்சமாக 27 கடைகள் திறக்கப்படும். இதன் மூலம் மொத்தம் 849 கடைகள் திறக்கப்படவிருந்தன. புதிய மதுக் கொள்கையில், டெல்லியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

முன்னதாக, டெல்லியில் உள்ள மதுக்கடைகளில் 60 சதவீதம் அரசுக்கு சொந்தமானது மற்றும் 40 சதவீதம் தனியாருக்கு சொந்தமானது. புதிய கொள்கை அமலுக்கு வந்த பிறகு, 100 சதவீதம் தனியாருக்கு சொந்தமானது.  இதனால் அரசு 3,500 கோடி பயனடையும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த விவகாரத்தில் ஊழல் நடந்ததாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா சிக்கினார். அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

பதிலடி தந்த காங்கிரஸ்:

இதனை அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸின் ட்விட்டர் பக்கத்தில் நசீருதீன் ஷா, ஜாக்கி ஷெராஃப் மற்றும் அனில் கபூர் நடித்து 1986 ஆம் ஆண்டு வெளியான கர்மா திரைப்படத்தின் தே தாரு பாடலுக்கு கெஜ்ரிவாலும் சிசோடியாவும் நடனம் ஆடுவதாக வீடியோ சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.  அந்த பாடலை பார்க்கும்போதே மதுபானக் கொள்கையை கிண்டல் செய்வது தெளிவாக தெரிகிறது.

"தேகே-தாரு (ஆல்கஹால் ஒப்பந்தம்) --- ஆம் ஆத்மி" என்ற ஹாஸ்டாக்குடன் பதிவிடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com