மதுபானக் கொள்கை முதல் டிடிசி பேருந்து வரை: டெல்லி மீதான பாஜகவின் திட்டம் என்ன??

மதுபானக் கொள்கை முதல் டிடிசி பேருந்து வரை: டெல்லி மீதான பாஜகவின் திட்டம் என்ன??

 கெஜ்ரிவால் அரசின் மீதான குற்றச்சாட்டுகள்:

டெல்லி அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பபட்டு வருகின்றன. புதிய மதுபானக் கொள்கை தொடர்பான குற்றச்சாட்டே இன்னும் தணியவில்லை.  தற்போது டெல்லி அரசு 1000 பேருந்துகளை வாங்கியதிலும் குற்றம் சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு டெல்லியின் துணைநிலை ஆளுநர்  சக்சேனாவும் பரிந்துரை செய்துள்ளார். இந்த இரண்டு குற்றச்சாட்டுகள் மட்டும் டெல்லி அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் மீது சுமத்தப்பட்டவை அல்ல. இந்த இரண்டும் தவிர டெல்லி அரசு மீது பல  குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பேருந்து ஊழல்:

முதலில் டிடிசி பஸ் வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து ஆரம்பிக்கலாம். டெல்லியின் துணை நிலை ஆளுநர் சக்சேனாவின் அலுவலகத்திற்கு  ஒரு புகார் வந்தது. இதில், டெல்லி போக்குவரத்துக் கழகம்  1000  பேருந்துகளை வாங்கியதில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுதப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தீவிரமடந்ததையடுத்து, தலைமைச் செயலாளர் விசாரணை நடத்தினார். இதில் முறைகேடுகளைக் கண்டறிந்த தலைமைச் செயலாளர், சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநரிடம் பரிந்துரை செய்தார். இதற்கு துணைநிலை ஆளுநரும் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். 

மேலும் படிக்க: டெல்லி அரசாங்கத்திற்கு பேருந்து வடிவில் புதிய சிக்கல்!!!

டெல்லி போக்குவரத்து கழகம் "முன்கூட்டியே திட்டமிட்ட முறையில்" பேருந்துகளை டெண்டர் விடுவதற்கும் கொள்முதல் செய்வதற்கும் அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக போக்குவரத்து அமைச்சரை நியமித்ததாக புகார் கூறப்பட்டது. இந்த டெண்டருக்கான ஏல மேலாண்மை ஆலோசகராக டிஐஎம்டிஎஸ் நிறுவனத்தை நியமித்தது தவறான செயல்களை எளிதாக்கும் நோக்கிலேயே செய்யப்பட்டது என்றும் புகார் கூறப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பேருந்துகளுக்கான கொள்முதல் ஏலம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பிறகு, மார்ச் 2020 இல், பேருந்துகளை வாங்குவதற்கும் வருடந்தோறும் பராமரிப்பு செய்வதற்கும் இரண்டாவது ஏலம் நடத்தப்பட்டது. இந்த இரண்டிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. 

அதே நேரத்தில், ஆம் ஆத்மி கட்சி இந்த குற்றச்சாட்டுகளை அரசியல் சதி என்று கூறி வருகிறது. பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி ஆம் ஆத்மி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த பாஜக வேண்டுமென்றே முயற்சிப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. 

புதிய மதுபானக் கொள்கை குற்றச்சாட்டு:

நவம்பர் 17, 2021 அன்று, டெல்லி அரசாங்கம் மாநிலத்தில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதன் கீழ், 
 32 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் அதிகபட்சமாக 27 கடைகள் திறக்கப்படும். இதன் மூலம் மொத்தம் 849 கடைகள் திறக்கப்படவிருந்தன. புதிய மதுக் கொள்கையில், டெல்லியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

முன்னதாக, டெல்லியில் உள்ள மதுக்கடைகளில் 60 சதவீதம் அரசுக்கு சொந்தமானது மற்றும் 40 சதவீதம் தனியாருக்கு சொந்தமானது. புதிய கொள்கை அமலுக்கு வந்த பிறகு, 100 சதவீதம் தனியாருக்கு சொந்தமானது.  இதனால் அரசு 3,500 கோடி பயனடையும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த விவகாரத்தில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவே சிக்கியுள்ளார். அவரது வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். 

அதே நேரத்தில், புதிய மதுக் கொள்கையால் பொதுமக்களும், அரசும் பாதிப்பை ஏற்படுத்துவதாக பாஜக குற்றம்சாட்டியது. பெரும் சாராய வியாபாரிகள் பயன்பெறுவது குறித்தும் பேசியுள்ளனர். 

மேலும் படிக்க: திட்டமிடப்பட்டு தொடரும் ரெய்டுகள்....!!!!!தாக்கு பிடிக்குமா ஆம் ஆத்மி!!!

1. உரிமக் கட்டணத்தை உயர்த்தி பெரும் தொழிலதிபர்கள் ஆதாயம் அடைவதாக குற்றச்சாட்டு

2. சில்லறை விற்பனையில் அரசாங்க வருவாய் பெருமளவு குறைவதாகக் குற்றச்சாட்டு

கழிவறையை வகுப்பறையாக காட்டியது:

மூன்றாவது குற்றச்சாட்டு பள்ளிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பள்ளிகளில் பணம் சம்பாதிப்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஊழல் செய்துள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி பள்ளிகளில் 2400 அறைகள் தேவை இருந்தது. ஆனால் அது 7180 அறைகளாக அதிகரிக்கப்பட்டது. கட்டுமானத் தொகை 50லிருந்து 90 சதவீதமாக உயர்த்தப்பட்டது. 

அதிகரித்த செலவிற்கு பின், 6133 வகுப்பறைகள் கட்டப்பட வேண்டிய நிலையில், 4027 வகுப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. பள்ளிகளில் 160 கழிப்பறைகள் தேவை ஆனால் 1214 கழிப்பறைகள் தேவை என்று கெஜ்ரிவால் அரசு கூறியது. இத்தகைய சூழ்நிலையில், கெஜ்ரிவால் அரசு பள்ளிகளின் கழிப்பறைகளை வகுப்பறைகளாக காட்டியுள்ளது. 

மேலும் படிக்க: வகுப்பறைகளாக மாற்றப்பட்ட கழிவறைகள்..!! டெல்லியில் தொடரும் ஊழல் குற்றசாட்டுகள்.!!

இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. டெல்லியின் பள்ளி மாதிரி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது எனவும் இதை பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை எனவும் அதனால்தான் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் எனவும் டெல்லி முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் கூறியுள்ளனர்.

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பணமோசடி:

சத்யேந்தர் ஜெயின் கடந்த ஆண்டு மே 30 ஆம் தேதி முதல் சிறையில் இருந்து வருகிறார் . பணமோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விவசாய நிலத்தையும் தவறாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இன்னும் விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சத்யேந்திர ஜெயினிடம் தொடர்ந்து நேர்மையாக இருந்தவர் எனவும் ஜெயின் மீது அரசியல் சதியினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

குஜராத் தேர்தலை முன்னிட்டே இது போன்ற தொடர் குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.  ஆம் ஆத்மிக்கு குஜராத்தில் ஆதரவு தொடர்ந்து அதிகரித்துவரும் காரணத்தினாலேயே இது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன எனவும் கூறுகின்றனர்.

இதையும் படிக்க: பாஜக கோட்டையை கைப்பற்றுவாரா கெஜ்ரிவால்!!!