ஜி-20ல் தாமரை..தேர்தல் சின்னத்தை விளம்பரப்படுத்தும் பாஜக..முற்றும் வார்த்தை போர்..

பொருளாதார ரீதியாக இந்தியா அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவின் பழமையான வரலாறு, பன்முகத்தன்மை, இந்தியர்களின் விருந்தோம்பல் பண்பு ஆகியவற்றை அனுபவிக்க வருமாறு ஜி-20 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர்.

ஜி-20ல் தாமரை..தேர்தல் சின்னத்தை விளம்பரப்படுத்தும் பாஜக..முற்றும் வார்த்தை போர்..

இந்தியா 2023ம் ஆண்டிற்கான ஜி-20 மாநாட்டிற்கு தலைமை ஏற்கவுள்ளது.  தற்போது இந்தோனேஷியா ஜி-20 அமைப்பிற்கான தலைமையை கொண்டுள்ளது.  இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜி-20 அமைப்பிற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது.

ஜி-20 என்பது:

ஜி-20 என்பது ஒரு உலகளாவிய அமைப்பகும். இது நடுத்தர வருமானம் உடைய நாடுகளின்  உலகளாவிய நிதி நிலைத்தன்மையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆண்டுதோறும் இந்த அமைப்பிற்கான கூட்டம் உறுப்பு நாடுகளி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தலைமை ஏற்கும்  நாட்டின் தலைவர்  உறுப்பினரல்லாத நாடுகளின் தலைவர்களை விருந்தினராக அழைக்கிறார்.

ஜி-20 அமைப்பின் உறுப்பினர்கள்: 

ஜி-20-ன் முழு உறுப்பு நாடுகள்- அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்.

எதற்காக வார்த்தை போர்?:

இந்தியாவில் 2023ல் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டிற்கான இலச்சினையை நேற்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.  அதில் தாமரை மலர் இடம் பெற்றுள்ளது.  இதனைக் காரணம் காட்டி காங்கிரஸ் பாஜகவுடனான விமர்சனத்தை தொடங்கியுள்ளது.

பிரதமரின் இலச்சினைக்கான விளக்கம்:

இலச்சினையின் தாமரை மலர் 7 இதழ்களை கொண்டுள்ளது.  அந்த 7 இதழ்களும் 7 கண்டங்களை குறிப்பதாக கூறினார் பிரதமர் மோடி.  அதனோடு பல பிரச்சினைகளுக்கு இடையில் நம்பிக்கையை ஊட்டுவதாகவும் உலக அளவில் நல்லிணக்கத்தை சித்தரிப்பதாகவும் தாமரை இருப்பதாக மோடி தெரிவித்தார்.

மேலும் தெரிந்துகொள்க:     ”உலகம் ஒரு குடும்பம்” ஜி-20 இலச்சினை வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடி!! ஜி-20 இலச்சினைக்கான பிரதமரின் விளக்கம் என்ன? விரிவாக காணலாம்!!

காங்கிரஸின் விமர்சனம்:

பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரையையே இது குறிப்பதாகவுள்ளது என காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தும் பாஜக:

”70 ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் கொடியை இந்தியாவின் கொடியாக மாற்றும் திட்டத்தை நேரு நிராகரித்தார்.  இப்போது, பாஜகவின் தேர்தல் சின்னம் இந்தியாவின் ஜி20 மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ சின்னமாக மாறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.  மோடியும் பாஜகவும் வெட்கமின்றி தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் எந்த வாய்ப்பையும் இழக்க மாட்டார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.

இழிவுபடுத்துகிறதா காங்கிரஸ்:

1954ல் பிறந்த ஜெய்ராமிற்கு 1950ல் அப்போதைய காங்கிரஸ் அரசால் தாமரை தேசிய மலராக அறிவிக்கப்பட்டது தெரியவில்லை போலும்.  காங்கிரஸ் எதற்காக ஒவ்வொரு தேசிய சின்னத்தையும் இழிவுப்படுத்தும் செயலை செய்து கொண்டிருக்கிறது என தெரியவில்லை என பாஜகவின் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட தாமரை:

70 ஆண்டுகளுக்கு முன்பு ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோதே தாமரை இந்தியாவின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது.  இதை கேட்க அதிர்ச்சியாக இருக்கிறதா ஜெய்ராம் ரமேஷ்.   காங்கிரஸ் இதனோடு ஒன்றும் நின்று விடவில்லை.  தொடர்ந்து தாமரையை பயன்படுத்தி கொண்டே தான் வந்தது.  தாமரை சின்னத்துடன் கூடிய நாணயங்கள், தாமரையின் மீதுள்ள சின்னம் இன்னும் பல என பாஜகவின் கஞ்சன் குப்தா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பெயரிலிருந்து கமலை நீக்கமுடியுமா?:

தாமரை நமது தேசிய மலர்.  இது மகா லட்சுமியின் அடையாளமாகவும் இருக்கிறது. நமது தேசிய  தேசிய மலரை எதற்காக எதிர்க்கிறீர்கள்?  அவ்வாறு எதிர்ப்பீர்கள் எனில் உங்கள் கட்சியின் உறுப்பினரான கமல்நாத் என்பவரின் பெயரில் இருந்து கமலை நீக்குவீர்களா? என கேள்வியெழுப்பியுள்ளார் பாஜகவின் செய்தி தொடர்பாளர் சேஷாத்.  இதனோடு கிண்டலாக ராஜீவ் என்பதன் பொருள் கூட கமல் தான் என நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார் சேஷாத்.

(ஹிந்தியில் கமல் என்ற வார்த்தை தாமரையை குறிக்கிறது)

முற்றும் வார்த்தை போர்:

தொடர்ந்து இந்த வார்த்தை போர் இரண்டு கட்சிகளுக்குமிடையே ட்விட்டரில் நடந்து வருகிறது.  தாமரையை கட்சியின் சின்னமாக காங்கிரஸ் பார்ப்பதாலேயே இந்த பிரச்சினை எழுந்துள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.  இந்தியாவின் பண்பாட்டை வெளிப்படுத்தும் பல சின்னங்கள் இருக்கும் போது தாமரையை பாஜக எதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் தொடர்ந்து பேசி வருகிறது.

இவர்களின் வார்த்தை போரில் ஒரு பயனாளர் தினமும் நாங்கள் வீட்டு வாயிலில் தாமரை பூக்கோலம் இடுவது பாஜகவை விளம்பரப்படுத்தவா என பதிவிட்டுள்ளார்.

இணையுமா பாஜக- காங்கிரஸ்?:

அரசியல் விமர்சகர்கள் கூறுகையில் இரண்டு கட்சியினரும் மோதல்களை விட்டு விட்டு உலகளவில் இந்தியாவை பிரகடனப்படுத்தி அதனை பெருமைப்படுத்தும் செயலில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   "தேவை 10,000 அம்பானிகளும் 20,000 அதானிகளும்” ஜி20 ஒருங்கிணைப்பாளர் அமிதாப்!!!