’போர் தொழில்’ மூலம் தமிழ் சினிமாவில் நேரடியாக களமிறங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்...!

’போர் தொழில்’ மூலம் தமிழ் சினிமாவில் நேரடியாக களமிறங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்...!

தமிழ் சினிமாவில் ' போர் தொழில்' எனும் திரைப்படத்தின் மூலம் இந்தியாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் நேரடியாக களமிறங்கி இருக்கிறது.

இந்தியாவின் வித்தியாசமான உள்ளடக்கத்துடன் கூடிய படைப்புகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட். இந்நிறுவனம் இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புலனாய்வு திரில்லர் ஜானரிலான 'போர் தொழில்' எனும் திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகிறது.

இதையும் படிக்க : ஏரிகளில் குப்பைகளை கொட்டினால் அபராதம் - அமைச்சர் பதில்!

அந்த வகையில் தற்போது, அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி இருக்கும் ’போர் தொழில்’ திரைப்படத்தை அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதன்மூலம் இந்தியாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் தமிழ் சினிமாவில் நேரடியாக களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டைட்டிலை இன்று பிரத்யேகமான காணொளி வீடியோ மூலம் இந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டதோடு, விரைவில் திரையரங்குகளில் வெளியிட தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரில்லர் அனுபவத்தை வழங்கும் எனவும் உறுதி அளித்துள்ளது.

இந்நிறுவனம் இதற்கு முன் 'ஹம்பிள் பொலிட்டீசியன் நோக்ராஜ் (கன்னடம்), வதம் (தமிழ்), குருதிக்காலம் (தமிழ்),  இரு துருவம் (தமிழ்) உள்ளிட்ட பல பிரபலமான இணையத் தொடர்களை தயாரித்து வழங்கி உள்ளது. மேலும் இந்நிறுவனம், தென்னிந்திய பொழுதுபோக்குத்துறை சந்தையில் மாறுபட்ட உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான வலுவான அர்ப்பணிப்புடன் பல்வேறு மொழிகளில் திரைப்படம் மற்றும் பிரத்யேக இணைய தொடர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.