"தமிழக இளைஞர்களை ஏமாற்றும் ஊழல் அரசு, திமுக" அண்ணாமலை விமர்சனம்!!

"தமிழக இளைஞர்களை ஏமாற்றும் ஊழல் அரசு, திமுக" அண்ணாமலை விமர்சனம்!!
Published on: 
Updated on: 
1 min read

திமுக அரசால் தமிழ்நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்தவித பயனும் இல்லை என மாநில பாஜக தலைவா் அண்ணாமலை விமா்சித்துள்ளாா். 

இது குறித்து பேசிய அண்ணாமலை, தமிழக இளைஞர்களை ஏமாற்றும், ஊழல் திமுக அரசு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் வருகின்ற முதலீடுகளையும் தவற விட்டு வெறும் சாராய விற்பனையில் சாதித்தால் போதும் என்ற எண்ணத்தில் செயல்படும் திமுக அரசால் தமிழ்நாட்டுக்கோ அல்லது தமிழக மக்களுக்கோ எந்தவித பயனும் இல்லை என சாடியுள்ளார்.

மேலும், எத்தனை நாட்களுக்கு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியும் விரைவில் இளைஞர்கள் தமிழக அரசை கேள்வி கேட்க தொடங்குவார்கள், எனவும் விமர்சித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com