உண்மையில் அவர்கள் சிவப்பு கம்பள கலாச்சாரம் கொண்டவர்கள். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பாபா சாகேப், தனது வாழ்க்கையை நாட்டிற்காக அர்ப்பணித்து அரசியலமைப்பை உருவாக்கினார்.
இந்திய ஒற்றுமை பயணம்:
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் இந்தூரில் சிவப்பு கம்பளம் விரித்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாஜக விமர்சனம்:
இதை மத்திய பிரதேசத்தின் பாஜக மாநில தலைவர் வி.டி.சர்மா விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி சிவப்பு கம்பள கலாச்சாரத்தை சேர்ந்தவர் என்று சர்மா கண்டனம் தெரிவித்தார். மேலும் நடைப்பயிற்சி என்பது வெறும் நிகழ்ச்சி என கிண்டலடித்துள்ளார் சர்மா.
அம்பேத்காரின் தியாகம்:
தொடர்ந்து பேசிய சர்மா, பாபா சாஹேப் வாழ்ந்த தியாகம் மற்றும் தவத்தின் பூமியான மோவ்வுக்குள் ராகுல் சென்றுள்ளார் என்று கூறினார். மேலும், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பாபா சாகேப், அவரது வாழ்க்கையை நாட்டிற்காக அர்ப்பணித்து அரசியலமைப்பை உருவாக்கினார் என தெரிவித்தார்.
ராகுல் மனதில் கார்ப்பரேட் கலாச்சாரம் மட்டுமே இருக்கிறது என விமர்சித்துள்ளார் மாநில பாஜக தலைவர் சர்மா.
காங்கிரஸ் பதில்:
காங்கிரஸ் தரப்பில் இருந்து இந்த விமர்சனத்திற்கு தற்போது வரை எவ்வித பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்படும்...!!!