குஜராத்தில் உள்ள அரசு ஊழியர்களை ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்ட கெஜ்ரிவால், அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் அவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
குஜராத் தேர்தல்:
குஜராத் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளது. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களை அவர்கள் பக்கம் இழுக்க பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன.
பழைய ஓய்வூதிய திட்டம்:
குஜராத்தில் உள்ள அரசு ஊழியர்களை ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்குமாறு வலியுறுத்திய கெஜ்ரிவால், அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் அவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
குஜராத்திலும்..:
சூரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், டெல்லி மற்றும் பஞ்சாப் சட்டசபை தேர்தல்கள் குறித்த தனது கணிப்புகள் உண்மையாகிவிட்டதாகவும், குஜராத்திலும் அதுதான் நடக்கும் என்று கூறியுள்ளார் கெஜ்ரிவால்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ’ஆஸ்ட்ரா ஹிந்த்’ பற்றி தெரிந்து கொள்ளலாம்...!!!