ஓலா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதலமைச்சர்...!

ஓலா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதலமைச்சர்...!
Published on
Updated on
1 min read

வேலூரில் மினி டைடல் பார்க்கிற்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 3 ஆயிரத்து 316 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓலா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.


தகவல் தொழில்நுட்பத்தை அனைத்து நிலை நகரங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில், தமிழ்நாட்டில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என மாநில அரசு முன்னதாக அறிவித்திருந்தது. அதன்படி வேலூரில் 30 கோடி மதிப்பில் 5 ஏக்கர் பரப்பளவிலான டைடல் பார்க்கிற்கு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

தொடர்ந்து ஒசூர் சிப்காட்டில் உள்ள ஐநாக்ஸ் ஏர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் அதிஉயர தூய்மையான திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலையையும், சென்னையில் உள்ள ஜி.எக்ஸ் குழுமத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்தையும்  துவங்கி வைத்தார். இதையடுத்து 7 ஆயிரத்து 614 கோடி ரூபாய் முதலீட்டில் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தித்திறன் கொண்ட ஆலைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஓலா மொபிலிட்டி நிறுவனத்துடன் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 3 ஆயிரத்து 316 பேருக்கு பணி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com