வேலூர் டைடல் பூங்கா - காணொலி மூலம் அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்...!

வேலூர் டைடல் பூங்கா - காணொலி மூலம் அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்...!

வேலூரில் கட்டப்படும் மினி டைடல் பூங்காவுக்கு, காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட இருக்கிறார்.

தகவல் தொழில்நுட்பத்தை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாட்டில் மினி டைட்டில் பூங்கா அமைக்கப்படும் என ஏற்கனவே மாநில அரசு அறிவித்திருந்தது.

இதையும் படிக்க : தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயக படுகொலை...நிச்சயம் பதில் கொடுப்போம் - உத்தவ்தாக்கரே!

அதற்கு முதற்கட்டமாக விழுப்புரம், தூத்துக்குடி, வேலூர், திருப்பூர் நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் வேலூரில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு இன்று காலை 11 மணியளவில் வேலூர் டைடல் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளார்.