சென்னை- டெல்லி இடையே கூடுதல் விமான சேவை...!

சென்னை- டெல்லி இடையே கூடுதல் விமான சேவை...!

சென்னை  உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தினமும் டெல்லிக்கு 19 விமானங்களும் டெல்லியில் இருந்து சென்னைக்கு 19 விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் டெல்லி விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் மேலும் 4 விமான சேவைகளை ஏர்-இந்தியா நிறுவனம் இயக்கி உள்ளது. சென்னையில் இருந்து  காலை 7:50 மணிக்கும், மாலை 3:40 மணிக்கும் 2  விமானங்கள் டெல்லிக்கு இயக்கப்படுகின்றன. அதேப்போல் டெல்லியில் இருந்து பிற்பகல் 2:45 மணிக்கும், இரவு 10:35 மணிக்கும் 2 புதிய விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து டெல்லி சென்று வரும் பயணிகளின் வசதிக்காக ஏர் இந்தியா நிறுவனம் புத்தாண்டு பரிசாக ஒரே நாளில் 4 புதிய விமான சேவைகளை இயக்கத் தொடங்கி உள்ளது. இதையடுத்து தற்போது சென்னை-டெல்லி-சென்னை இடையே தினமும் 42 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

இதையும் படிக்க : அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள்...! நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து...!