அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள்...! நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து...!

அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள்...! நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து...!
Published on
Updated on
1 min read

கடலூர் : வேப்பூர் அருகே அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகியுள்ளனர்.  

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அய்யனார் பாளையம், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து தனியார் பேருந்து, இரண்டு லாரி இரண்டு கார் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் ஒரு காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள், இரண்டு குழந்தைகள்  உட்பட ஐந்து பேர் காருக்குள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கி இருந்த உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விபத்துக்குள்ளானதில் இறந்தவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தினர். காரின் நம்பரை வைத்து விசாரணை நடத்தியதில் சென்னை, நங்கநல்லூரை சேர்ந்த விஜயவீரராகவன் என்பது தெரியவந்துள்ளது.

விஜய வீரராகவன் மற்றும் அவரது மனைவி வட்சலா, தாயார் வசந்த லட்சுமி, குழந்தைகள் விஷ்ணு, அதிர்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே காரின் உள்ளே இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் விசாரணை செய்து வருகின்றார். இந்நிலையில் கார் மீது லாரி மோதும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com