பழங்குடியினருக்கான ‘ஆதி மஹோத்சவ்’..... தொடங்கி வைக்கிறார் பிரதமர்!!!

பழங்குடியினருக்கான ‘ஆதி மஹோத்சவ்’..... தொடங்கி வைக்கிறார் பிரதமர்!!!
Published on
Updated on
1 min read

டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் பிப்ரவரி 16 முதல் 27 வரை 'ஆதி மஹோத்சவ்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த திட்டம் 200 ஸ்டால்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்களின் வளமான மற்றும் பன்முக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும். 

ஆதி மஹோத்சவ்:

டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் ‘ஆதி மஹோத்சவ்’ விழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.  இந்த நிகழ்வில் பழங்குடியினரின் கலாச்சாரம், கைவினை கலைகள், உணவு, வணிகம் மற்றும் பாரம்பரிய கலைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளது. 

பழங்குடியினருக்காக:

நாட்டின் பழங்குடியின மக்களின் நலனுக்காக பிரதமர் மோடி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  இதனுடன், நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் பழங்குடி சமூகத்தின் பங்களிப்பிற்கும் அவர் உரிய மரியாதை அளித்து வருகிறார்.

சந்தைப்படுத்துதல்:

இது பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு அமைப்பின் முயற்சியின் வெளிப்பாடாகும்.  இந்த ஆண்டு பிப்ரவரி 16 முதல் 27 வரை டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த திட்டம் 200 ஸ்டால்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்களின் வளமான மற்றும் பன்முக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக தொடங்கப்படவுள்ளது.  இவ்விழாவில் சுமார் ஆயிரம் பழங்குடி கைவினைஞர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com