தனித்தனியாக சென்ற அதிமுகவினர்...சொன்னது என்ன?

தனித்தனியாக சென்ற அதிமுகவினர்...சொன்னது என்ன?

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை ஒட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். மற்றும் சசிகலா அணியினர்  தனித்தனியாக சென்று அஞ்சலி செலுத்தினர். 

ஈபிஎஸ் அணியினர் அஞ்சலி :

பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் ஜெயக்குமார்  பொன்னையன் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.  அப்போது பேசிய பொன்னையன், இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைக்கும் என்று கூறினார்.  

ஓபிஎஸ் அணியினர் அஞ்சலி :

அவரை தொடர்ந்து, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அ.தி.மு.க. வழக்கு முடியட்டும் அப்போது செல்கிறேன் என்று கூறினார்.

இதையும் படிக்க : ஒரே வேட்பாளர்...அதுதான் பாஜாகவின் நிலைப்பாடு...!

சசிகலா அஞ்சலி :

இவரைத் தொடர்ந்து, வி.கே.சசிகலா, அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, உறுதி மொழி ஏற்றார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக எனும் தீய சக்தியை  ஒழிக்க அதிமுக ஒன்றிணைவது அவசியம் என்றும்,  அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியின் அருகில் நெருங்கி விட்டோம் என்றும் கூறினார். 

டிடிவி தினகரன் அஞ்சலி :

இதேபோன்று அண்ணா நினைவு தினத்தை ஒட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க.வின் ஆட்சியை வீழ்த்த அ.தி.மு.க. ஓரணியில் இணைய வேண்டும் என்றார்.