தி.மு.க வை விட காங்கிரசை விட பணத்தில் வலிமையான கட்சி அ.தி.மு.க.....!!

தி.மு.க வை விட காங்கிரசை விட பணத்தில் வலிமையான கட்சி அ.தி.மு.க.....!!

தி.மு.க வை விட காங்கிரசை விட பணத்தில் வலிமையான கட்சி அ.தி.மு.க.  ஆனால் ஈரோட்டில் அவர்கள் ஏன் வெற்றி பெறவில்லை.  காரணம் பணம்‌ மட்டும் வெற்றியைத் தீர்மானித்துவிடாது.

நெப்போலியன் தரையில் நடக்கும் போரில் வெற்றி வீரர்களை வீழ்த்தினானே தவிர, ஒழிய கடல் யுத்தத்திலே அவர் வெற்றி வீரர்களை வீழ்த்த முடியவில்லை.  ஆங்கிலேயர்கள் அதை நன்கு கவனித்து வைத்திருந்தார்கள்.  எனவே அவரோடு தரையுத்தம் செய்வதை தவிர்த்து அவர்கள் கடல் யுத்தத்தில் ஈடுபட்டு அவரை வீழ்த்தினார்கள்.  இதைப் போல ஏராளமான நிகழ்வுகளை நாம் வரலாற்றில் சொல்லலாம்.  அரசியலில் சொல்லலாம்.  ஆனால் இன்றைக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் மரியாதைக்குரிய ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய வழி என்ன பிறருடைய வழி என்ன  என்னவென்றெல்லாம் பற்றி சிந்திப்பவர் எனப் பேசியுள்ளார் கே.எஸ்.அழகிரி.

மேலும் தன்னுடைய திறமை என்ன பிறருடைய திறமை என்ன இவைகளை அறிந்து வைத்திருப்பது மட்டுமல்லாமல் தான் விரும்புகிறேன் அதனால் தான் ஆதரிக்கிறேன் என்ற கொள்கையை எல்லா நேரங்களிலும் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என பாஜகவை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

தொடர்ந்து பேசிய அவர் சில பேர் ராஜதந்திரம் இருக்கின்றது என்ற  பெயரில் எல்லாவற்றையும் தவற விடுவார்கள் அல்லது மறைத்து சொல்வார்கள் ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் நான் பார்த்து கொண்டிருக்கிறேன்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே தன்னுடைய கருத்துகளை அழுத்தம் திருத்தமாக சொல்லுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் மத்திய அரசுக்கு தர வேண்டிய மரியாதை மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இருக்க வேண்டிய உறவு முறை நெறிமுறைகள் பண்பாடு இவைகளில் அவர் கவனம் செலுத்துகிறார் எனவும் கூறியுள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தல் குறித்து பேசிய கே.எஸ்.அழகிரி தி.மு.க வை விட காங்கிரசை விட பணத்தில் வலிமையான கட்சி அ.தி.மு.க.  ஆனால் ஈரோட்டில் அவர்கள் ஏன் வெற்றி பெறவில்லை.  காரணம் பணம்‌ மட்டும் வெற்றியைத் தீர்மானித்துவிடாது. என பேசியுள்ளார்.

இதையும் படிக்க:   70 ஆண்டுகளைக் கடந்த சரித்திரம்...!!