70 ஆண்டுகளைக் கடந்த சரித்திரம்...!!

70 ஆண்டுகளைக் கடந்த சரித்திரம்...!!
Published on
Updated on
1 min read

70 ஆண்டுகள் கடந்த ஒரு கட்சியினுடைய தலைவரை பற்றிய சுவையான கண்காட்சி சுவை குறையாமல் சரித்திரமும் பிழையாமல் ஏற்பாடு செய்துள்ளனர்.  சரித்திரத்தை சொல்வது எளிதல்ல அந்த சரித்திரத்தை சுவையாக செய்திருக்கின்றனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.  இந்த புகைப்படக் கண்காட்சியை காண நேரில் வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அங்கே வைக்கப்பட்டு இருந்த முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படங்களை கண்டு ரசித்தார்.

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் “ 70 ஆண்டுகள் கடந்த ஒரு கட்சியினுடைய தலைவரை பற்றிய சுவையான கண்காட்சி சுவை குறையாமல் சரித்திரமும் பிழையாமல் ஏற்பாடு செய்துள்ளனர்.  அமைச்சர் சேகர்பாபு எதை செய்தாலும் திருந்த செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர்.  சரித்திரத்தை சொல்வது எளிதல்ல அந்த சரித்திரத்தை சுவையாக செய்திருக்கின்றனர்.” என்று பேசியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் திரைப்பட நடிகர் ஜோ மல்லூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com