
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனையின் போது 36 லட்ச ரூபாய் சிக்கியதால், பரப்பரப்பு நிலவியது.
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரவு 11 மணி அளவில் 53 வயதான கிருஷ்ணமூர்த்தி என்ற நபர் சந்தேகத்துகிடமாக நடந்துகொண்டுள்ளார். அவரை கண்டு சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் பெங்களூரை சேர்ந்தவர் என்றும், பெங்களூருவில் இருந்து ரயில் மூலம் 25 லட்ச ரூபாய் கொண்டு வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை செய்ததில், அந்த பணத்தை சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்க நகை வியாபாரியிடம் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல, இன்று காலை சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த வாரு என்ற நபரை விசாரித்ததில், அந்த நபர் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் 11 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயை சட்டவிரோதமாக ரயில் மூலம் கொண்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் அந்த நபர் சென்னை மின்ட் சாலையில் தங்கம் வாங்குவதற்காக அந்த பணத்தை கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், இரண்டு நபரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.