சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தடம் பதிக்க உள்ள நிலையில், முக்கிய நிகழ்வான லேண்டரின் "சாப்ட் லேண்டிங்" என்ற நிகழ்வு 15 நிமிடங்களில் நடைபெறும் என கூறுகின்றனர்.
சந்திரயான் 2 தோல்விக்குப் பிறகு செய்யப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட விண்கலமாக சந்திரயான் மூன்று கடந்த மாதம் ஜூலை 14ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த முழு திட்டமும் வெற்றி பெறுவதற்கு முக்கிய நிகழ்வான "சாப்ட் லாண்டிங்" என்னும் நிகழ்வு 15 நிமிடங்களில் அடங்கியுள்ளது. அந்தப் பதினைந்து நிமிடங்களில் நடைபெறும் செயல்கள் எட்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக, சுமார் 6000 கிலோ மீட்டர் வேகத்தில் 25 கிலோ மீட்டர் தொலைவில் நிலவை சுற்றி நீள் வட்ட பாதையில் விண்கலம் பயணித்துக் கொண்டிருக்கும் போது, அதன் வேகத்தை 1200 கிலோமீட்டர் ஆக குறைத்து நிலவில் இருந்து 7.4 கிலோ மீட்டர் உயரத்திற்கு கொண்டு வருவார்கள். இந்த இறுதி பதினைந்து நிமிடங்களில் முதல் கட்டத்திற்கு மட்டும் பத்து நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.
இரண்டாம் கட்டமாக, பக்கவாட்டில் பயணிக்கும் விண்கலம் 50 டிகிரி அளவிற்கு திருப்பும் பணி நடைபெறும். மேலும் நிலவின் மேற்பரப்பிற்கும் விண்கலனுக்கும் இடையில் 7.4 கிலோ மீட்டர் என்ற உயரத்தை 6.3 மூன்றாக குறைப்பார்கள். தொடர்ந்து, விண்கலன் குறிப்பிட்ட இலக்கை நோக்கி பயணிக்கிறதா? அப்படி இல்லை என்றால் கலன் தரை இறங்கும் இடத்தை முடிவு செய்யும் பணியும் நடைப்பெறும். மேலும் விண்கலனில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கணினி இயந்திரம் மூலமாக எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதையும் இந்த கட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
மூன்றாம் கட்டமாக, 50 டிகிரி அளவிற்கு விண்கலன் சாய்க்கப்பட்டதற்கு பிறகாக இந்த கட்டத்தில் மேலும் நேர் கீழாக விண்கலன் சாய்க்கப்படுகிறது. மேலும் இஞ்சின் முன்புறமாக இயக்கப்படுகிறது. இதன்மூலம் 6.3 கிலோமீட்டர் நிலவிலிருந்து உயரத்தில் பறந்து வந்த விண்கலன் 800 மீட்டர் அளவிற்கு உயரம் குறைக்கப்படுகிறது.
இதையும் படிக்க : திமுக அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு இன்று விசாரணை!!
நான்காம் கட்டமாக, விண்கலனின் வேகம் முற்றிலும் குறைக்கப்பட்ட நிலையில் 800 மீட்டர் உயரத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திற்கு விண்கலன் ஊர்ந்து வந்தடையும். சுமார் 22 நொடிகள் ஒரே இடத்தில் இந்த விண்கலன் மிதக்கும். இந்த சமயத்தில்தான் விண்கலனில் இருக்கும் இடர்ணர் ஆபத்து தவிர்க்கும் கருவி தனது பணியை செய்யும். தரையிறங்க வேண்டிய சரியான இடத்தை முடிவு செய்வது மட்டுமல்லாமல் மேல் நோக்கிய தள்ளு விசையை உண்டு பண்ணும். இதன் மூலம் விண்கலன் மேலோக்கி செல்லாமல் கீழே விழாமல் ஒரு குறிப்பிட்ட உயரத்திலிருந்து துல்லியமாக நிலவின் மேற்பரப்புகளை ஆராய்ச்சி செய்யும்.
ஐந்தாம் கட்டமாக, விண்கலம் தரையிறங்குவதற்கான பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்ததற்கு பிறகு அதன் உயரத்தை 150 மீட்டரில் இருந்து 60 மீட்டராக குறைப்பார்கள். விண்கலனின் வேகத்தை குறைத்ததன் மூலமாக நிலவில் உள்ள புவியீர்ப்பு விசை விண்கலனை நிலவின் நிலப்பரப்பை நோக்கி ஈர்க்கும். இந்த நிலையில் விண்கலனில் இருக்கும் லேசர் டாப்ளர் வெலாசிட்டி மீட்டர் இனம் கருவி லேசர் ஒன்றை நிலவின் நிலப்பரப்பின் மீது பட செய்து விண்கலன் பயணிக்கும் வேகத்தை தெரியப்படுத்தும். இதன் மூலம் விண்கலன் கூடுதல் வேகத்தில் பயணிப்பதை அறிந்து கொள்ள முடியும்.
ஆறாம் கட்டம், 60 மீட்டர் என்ற உயரத்தை 10 மீட்டர் என்ற உயரத்திற்கு குறைக்கும் பணி ஈடுபடுவார்கள் இந்த நிலையில் பிரெண்ட் பேசும் கேமரா கருவி மூலம் விண்கலன் நிலவை நோக்கி பயணிக்கும் அந்த காணொளிகள் எடுக்கப்படும்.
ஏழாம் கட்டமாக, எஞ்சின் அணைக்கப்படாமல் அப்படியே நிலவில் தரையிறங்கினால் நிலவின் மேற்பரப்பில் உள்ள மெல்லிய துகள்கள் விண்கலெனில் முக்கிய பாகங்கள் மீது படர்ந்து அதன் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தும் என்பதால் 10 மீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருக்கும் போது வின்கலனின் எஞ்சின் முழுவதுமாக அணைக்கப்படும். இந்த நிகழ்வின் போது விண்கலன் ஒரு நொடிக்கு இரண்டு மீட்டர் என்ற வேகத்தில் நிலவின் தரை பரப்பின் மீது தரை இறங்கும் அதிகபட்ச வேகமாக நொடிக்கு மூன்று மீட்டர் என்ற வேகத்தில் தரை இறங்கினாலும் தாங்கும் அளவிற்கு விண்கலனின் கால்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
விண்கலன் நிலவிலிருந்து 800 மீட்டர் தூரத்தில் பயணிக்கும் போது இருந்து நிலவின் நிலப்பரப்பின் மீது தரையிறங்கும் வரையிலான பணிகளுக்கு எடுத்து கொள்ளும் நேரம் 4 1/2 நிமிடங்கள்.
எட்டாம் கட்டமாக, நிலவின் நிலப்பரப்பின் மீது லேண்டெர் தர இறங்கியதற்கு பிறகு சிறிது நேரம் ஓய்வெடுக்கும். பின்னர் லேண்டரிலிருந்து சாயும் சாய்வுப் பலகை வாயிலாக ஊர்தி கலன் ரோவர் வெளியே வரும். லேண்டெர் மற்றும் ரோவர் ஆகிய இரண்டு கருவிகளிலும் இருக்கக்கூடிய கேமரா மூலம் லேண்டர் ரோவரையும் ரோவர் லேண்டரையும் எடுத்து அனுப்பும் புகைப்படம் இந்தியா மட்டும் அல்ல உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்க்கும் புகைப்படமாக மாறி இருக்கிறது.