சேலம் வெடி விபத்து : உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!

சேலம் வெடி விபத்து : உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!

Published on

சேலம் மாவட்டத்தில் நிகழ்ந்த பட்டாசு கிடங்கு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். 

சேலம் இரும்பாலை அருகேயுள்ள எஸ் கொல்லப்பட்டி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு குடோனில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் குடோன் உரிமையாளர் சதீஷ்குமார், நடேசன் மற்றும் மணிமேகலை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் ஆறு பேர் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com