3 கிலோ கஞ்சா 3 பேர் கைது ஆபரேஷன் கஞ்சா 3.0 என்னவானது ?

தமிழகத்தில் கஞ்சா, புகையிலை, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தல், பதுக்கல், விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரைக் பாரம்பிச்சமின்றி உடனடியாக கைது செய்ய வேண்டும்
3 கிலோ கஞ்சா   3 பேர் கைது   ஆபரேஷன் கஞ்சா 3.0 என்னவானது ?
Published on
Updated on
1 min read

'ஆபரேஷன் கஞ்சா 3.0'

தமிழ் நாட்டில் கஞ்சா, புகையிலை, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தல், பதுக்கல், விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரைக் பாரம்பிச்சமின்றி உடனடியாக கைது செய்ய வேண்டும். எனவும் அவர்களின் வங்கிக் கணக்குகள், சட்ட விரோத சொத்துகளை முடக்க வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார் இதற்கான நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் கஞ்சா 3.0' என்று பெயர் வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் கஞ்சா கடத்தல், விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனா். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா கடத்துபவர்கள் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும் இரவு மட்டும் பகல் ரோந்து காவலர்களை பலப்படுத்தி கஞ்சா கடத்தல்  மற்றும் பதுக்குப்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அதன் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து காவல் நிலையத்திற்கும் உத்தரவிட்டார் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பாலப்பட்டு கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் சேலம் மாவட்டம் கருமந்துறையில் இருந்து கஞ்சா கடத்தி  வரப்படுவதாக சங்கராபுரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ரகசிய தகவலின் பெயரில் கிராமத்திற்கு சென்ற சங்கராபுரம் காவல்துறையினர் புதுப்பாலப்பட்டு பெத்துக்காடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்

மூன்று கிலோ கஞ்சா  மூன்று பேர் 

அதே புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சார்ந்த சிங்காரம் மகன் குமார், பாண்டியன் மகன் வல்லரசு, ஆனந்தன் மகன் அருள் ஆகிய மூன்று நபர்களும் இரு சக்கர வந்து கொண்டிருக்கிறார் அவர்களை சோதனை செய்து போது அவர்கள் வைத்திருந்த பையில் சுமார் மூன்று கிலோ கஞ்சா பொட்டலங்ள் இருந்தது தெரிய வந்தது இதணையடுத்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து உடனடியாக மூன்று நபர்களை கைது செய்த காவல்துறையினர் சங்கராபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது விசாரணையில் சேலம் மாவட்டம் கருமந்துறையில் இருந்து கஞ்சா  வாங்கிவரப்பட்டதாகவும் மேலும் சங்கராபுரம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும்  விசாரணையில் தெரியவந்தது இந்நிலையில் மூன்று நபர்கள்  மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com