ரூ. 10 கோடி மதிப்பில் உதவி! மணிப்பூர் முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்...!!

ரூ. 10 கோடி மதிப்பில் உதவி! மணிப்பூர் முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்...!!
Published on
Updated on
1 min read

மணிப்பூருக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப அனுமதிக்க கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். 


மணிப்பூரில், கடந்த 3 மாதங்களாக நடந்து வரும் கலவரம் காரணமாக ஏராளமான மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மணிப்பூரில் முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிடும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  மணிப்பூரில் உள்ள தமிழர்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தொடர்ந்து அவர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து, மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான படுக்கை விரிப்புகள், கொசுவலை, மருந்துகள், பால் பவுடர், சானிட்டரி நாப்கின்ஸ் உள்ளிட்ட தேவையான நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு ஒப்புதல் வழங்குமாறு தனது கடிதத்தில் முதலமைச்சர் கோரியுள்ளார். 

முன்னதாக, கடந்த 2 நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இணைந்து மணிப்பூர் சென்று அம்மாநில ஆளுநரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துவந்ததையடுத்து, தற்போது அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com