புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கில் டி என் ஏ ரத்த மாதிரி பரிசோதனை செய்வதற்கு மறுப்பு தெரிவித்த வேங்கை வயலை சேர்ந்த எட்டு பேருக்கு சி பி சி ஐ டி போலீசால் வழங்கப்பட்ட சம்மன் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றம் மூலமாக எட்டு பேரிடம் வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் 189 பேர்களிடம் விசாரணை நடத்தி அதில் முதல் கட்டமாக 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சம்மன் அனுப்பினர் அதில் மூன்று நபர்கள் மட்டுமே டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர். மீதம் உள்ள எட்டு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்தனர்.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 10 பேருக்கு டி என் எ ரத்த மாதிரி பரிசோதனை எடுக்க சம்மன் அனுப்பப்பட்டு 10 பேருக்கும் இடையே ரத்தமாக பரிசோதனை எடுக்கப்பட்டது. டிஎன்ஏ பரிசோதனை எடுத்த 13 நபர்களின் மாதிரி, பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது
இந்த நிலையில் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த எட்டு பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிசிஐடி போலீசார் தங்களை உள்நோக்கத்தோடு டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த பார்க்கின்றனர். அதனால் அவர்களை, நீதிமன்றம் தடுத்து நிறுத்த வேண்டும், என்று மனு தாக்கல் செய்தனர். மனு மீது விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த வழக்கில் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை முடிவு தான் முக்கியமாக தடயமாக இருக்கும் என்று சிபிசிஐ போலீசார் கூறுகின்றனர். எனவே எட்டு பேரும் டி என் ஏ ரத்த மாதிரி பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, டி என் ஏ யார் யாருக்கு எடுக்கப்படுகிறதோ அவர்கள் பெயர்களை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து சிபிசிஐ போலீசார் முறையாக அனுமதி பெற்று அவர்களிடம் ரத்த மாதிரி பரிசோதனை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதன்படி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சி பி சி ஐ டி போலீசார் மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த எட்டு பேருக்கு மீண்டும் ரத்த மாதிரி பரிசோதனை எடுக்க நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் அதற்கு அவர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.
இது தவிர மேலும் நான்கு சிறார்களுக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுக்க வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார், சிறார்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் டி.என்.ஏ பரிசோதனைக்கு வரும் அடுத்த எட்டு பேரை என்று மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதன்படி தற்போது 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்
வழக்கில் டி என் ஏ ரத்த மாதிரி பரிசோதனை செய்வதற்கு மறுப்பு தெரிவித்த வேங்கை வயலை சேர்ந்த எட்டு பேருக்கு, சி பி சி ஐ டி போலீசால் வழங்கப்பட்ட சம்மன் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றம் மூலமாக எட்டு பேரிடம் வழங்கப்பட்டது.
இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் நாளை மாலை இரண்டு மணிக்குள் எழுத்து பூர்வமாக பதில் அளிப்பதற்கு நீதிபதி ஜெயந்தி எட்டு பேரிடம் அறிவுறுத்தியுள்ளார்.