ஊத்தங்கரை அருகே நடைபெற்ற ஆணவ படுகொலையை கண்டித்து.... விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்! !

ஊத்தங்கரை அருகே நடைபெற்ற ஆணவ படுகொலையை கண்டித்து....  விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்! !
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தில் காதல் திருமணம் செய்த சுபாஷ், அவரது பாட்டி கண்ணம்மாள்,மருமகள் அனுசியா  ஆகியோரை  வெட்டி தாக்கியதில்  சுபாஷ், அவரது பாட்டி இரண்டு பேரும் சம்பவ இடத்திலே துடி துடித்து உயிரிழந்தனர்.

சுபாஷின் மனைவி  அனுசியா தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டு பேரையும்  ஆணவ படுகொலை செய்த சுபாஷின் தந்தை தண்டபாணியை போலீசார் கைது செய்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் சட்டமன்ற தொகுதி செயலாளர் சங்கத் தமிழ் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அந்த  ஆர்ப்பாட்டத்தில்,கட்சியின் மாநில விவசாய அணி துணை செயலாளர் அசோகன்,நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் குபேந்திரன், மாநில மகளிர் அணி துணை செயலாளர் ஜெயலட்சுமி,தொகுதி துணை செயலாளர் பிரபாகரன்,ஒன்றிய செயலாளர் மகேந்திரன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆணவ படுகொலையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்,கொலை குற்றவாளியான தண்டபாணிக்கு வழக்கை விரைவில் நடத்தி தகுந்த தண்டனை வழங்க வேண்டும்,கிருஷ்ணகிரி மாவட்டத்தை வன்கொடுமை  மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

 மேலும், படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வரும் அனுசியாவுக்கு தமிழக அரசு உயர் தர சிகிச்சை வழங்கி, 50 லட்சம் நிவாரண உதவியும், அவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும் எனவும்  தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் துரைவளவன்,பெருமாள், மற்றும் ஏராளமான விசி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com