அரியலூர் மாவட்டத்தில் சோழர்களின் பெருமைகளை உணர்த்தும் வகையில் கட்டமைக்கப்பட உள்ள அருங்காட்சியம் அமைய உள்ள இடத்தை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்களின் பெருமைகள், ராஜேந்திர சோழனின் பெருமைகளை உணர்த்தும் வகையில் நவீன உலக தரத்திலான அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தை தொல்லியல் துறை அமைச்சரும் நிதி அமைச்சருமான தங்கம். தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தின் பரப்பளவு. மேலும் மேற்கொள்ளப்படும் வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார்.
அப்பொழுது இதுகுறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, கங்கைகொண்ட சோழபுரத்தில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்களின் பெருமைகளையும், குறிப்பாக ராஜேந்திர சோழனின் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றும் வகையில் உலக தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "அருங்காட்சியகம் எந்த இடத்தில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதை கண்டறிய, தற்பொழுது ஆய்வு மேற்கொண்டேன். இதில் இரண்டு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. கோயிலுக்கு அருகில் உள்ள இடம் மற்றும் அகழ்வாராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய குருவாலப்பர் கோவில் உள்ளிட்ட இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடங்களில் எந்த இடம் சிறப்பாக இருக்கும் அதிக அளவு பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய இடமாக இருக்கும் என்பதை கண்டறியும் பணியை தொடங்கி உள்ளோம்" எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க || காவிரி நீர் வேண்டி, பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!!