இந்திய அணி அரை இறுதிக்கு தகுதிபெறுமா..? - வாய்ப்பு  இருப்பதாக நிபுணர்கள் கருத்து...

இரு தோல்விக்கு பிறகும் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய அணி அரை இறுதிக்கு தகுதிபெறுமா..? - வாய்ப்பு  இருப்பதாக நிபுணர்கள் கருத்து...
Published on
Updated on
1 min read

டி 20 உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாது அணியுடனான படுதோல்விக்கு பிறகு இந்திய அணி அரை இறுதிக்குத் தகுதி பெறமுடியுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கு நிபுணர்கள் வாய்ப்பு உள்ளது என்றே பதிலளிக்கின்றனர்.

அதாவது இந்தியா விளையாடும் போட்டிகளைப் பொறுத்து மட்டுமல்லாது, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் விளையாடும் போட்டிகளும் இந்திய அணியை அரை இறுதிக்குத் தகுதி பெற செய்யும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியா தனது கடைசி மூன்று போட்டிகளில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகளை எதிர்கொள்கிறது. இந்த மூன்று போட்டிகளையும் இந்தியா வெல்லும் பட்சத்தில் இந்தியாவுக்கு ஆறு புள்ளிகள் கிடைக்கும். குரூப் 2-பிரிவில் இந்திய அணியைத் தவிர வேறு எந்த அணியும் புள்ளிபட்டியலில் ஆறு புள்ளிகளுக்கு மேல் பெறவில்லை என்றால் இந்தியா அரை இறுதிக்குத் தகுதி பெறும். அதற்கு ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அடுத்து வரும் போட்டிகளில் தோல்வியை சந்திக்க வேண்டியது கட்டாயம். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com