20 ஓவர் உலகக்கோப்பை அயர்லாந்து அணியை வீழ்த்திய இலங்கை  

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், அயர்லாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
20 ஓவர் உலகக்கோப்பை அயர்லாந்து அணியை வீழ்த்திய இலங்கை   
Published on
Updated on
1 min read

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், அயர்லாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்று ஆட்டங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. அபுதாபியில் நடைபெற்ற 8-வது ஆட்டத்தில், அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் ஜோசுவா லிட்டில் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை அணியில் பதும் நிஷன்கா, ஹஸரங்கா ஆகியோர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் பால்பிரின் நிலைத்து நின்று 39 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேம்பெர் 24 ரன்களில் அவுட் ஆக, மற்ற வீரர்கள் அனைவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால் 18 புள்ளி 3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த அயர்லாந்து அணி, 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 70 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com