ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீரர்கள் லக்சயா சென், ஹெச்.எஸ். பிரனாய் முன்னேறினர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தை, 19-21,21-9,21-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பிரணாய் காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஜப்பான் வீரர் கன்டே சுனேயாமாவை 21-14,21-16 என்ற செட் கணக்கில் தோற்கடித்த லக்சயா சென் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் டென்மார்க் இணையை வீழ்த்தி இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி இணையும் காலிறுதிப் போட்டிக்கு முன்னேற்றமடைந்தார்.