நாளை தொடங்குகிறது; சர்வதேச அலைச்சறுக்கு போட்டி!

நாளை தொடங்குகிறது; சர்வதேச அலைச்சறுக்கு போட்டி!
Published on
Updated on
1 min read

இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச அலைச்றுக்கு போட்டி நாளை தொடங்கி வருகின்ற 20 ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுர கடற்கரையில் நடைபெற இருக்கிறது.

இதற்கான தொடக்க விழா தற்போது சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.

சர்வதேச தரத்திலான 15 இந்திய வீரர்கள் உட்பட தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, வங்காளதேசம், மியன்மார், உள்ளிட்ட 16 நாடுகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்கின்றனர். 3 ஆயிரம் தர புள்ளிகளை கொண்ட சர்வதேச போட்டி முதன் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியும். மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் அருகில் 7 நாட்கள் போட்டிகள் நடைபெற இருக்கிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com