இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இருப்பினும் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. 3 வது போட்டி ரோஹித் சர்மா தலைமையில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஆஸிதிரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 96 ரன்களும், ஸ்மித் 74 ரன்களும், லபுஷேன் 72 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, வாஷிங்டன் சுந்தர் தொடக்க வீரராக களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 81 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி 56 ரன்களில அவுட்டானார். இறுதியில் 49 புள்ளி 3 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றறது.
தொடரினை இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றாலும் ஆஸ்திரேலிய அணி வெற்றியுடன் இந்த தொடரை முடித்தது. இந்நிலையில் வரும் அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா.- இந்திய அணி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க || மணிப்பூரை, பதற்றமிக்க மாநிலமாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம்!!