ஆசிய கிாிக்கெட் கோப்பை தொடாில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடா் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சூப்பர்-4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் முதலில் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 24 புள்ளி 1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோா் களத்தில் இருந்தனர்.
தொடா்ந்து நேற்று மீண்டும் போட்டி தொடங்கிய நிலையில், அதிரடியாக விளையாடிய விராட் கோலி 122 ரன்களும், கே.எல்.ராகுல் 111 ரன்களும் எடுத்து அசத்தினா். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரா்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில் அந்த அணி 32 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினாா்.
இதையும் படிக்க || நடிகை விஜயலட்சுமி வழக்கில், சீமான் இன்று ஆஜர்!!