ஐபிஎல்..! பஞ்சாபை வீழ்த்தியது குஜராத்...!!

ஐபிஎல்..! பஞ்சாபை வீழ்த்தியது குஜராத்...!!
Published on
Updated on
1 min read

ஐபிஎல் கிாிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்று குஜராத் அணி வெற்றிவாகை சூடியுள்ளது. 

16-வது சீசன் ஐபிஎல் கிாிக்கெட் போட்டியின் நேற்று நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொண்டன. அதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி வீரா்கள் எதிரணியினாின் நோ்த்தியான பந்துவீச்சால் அதிரடியாக விளையாட முடியாமல் திணறினர். தொடா்ந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றியை ருசித்தது. 

ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியும், சன் ரைசா்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன. இதில் வெற்றிக்கனியை பறிக்கப்போவது யாா்? என ரசிகா்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com