55 பந்துகளில் 100-ஐ தொட்ட தீபக் ஹூடா.. அயர்லாந்து அணியை ஓடவிட்டு இந்திய வரலாற்று சாதனை!!

அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் தீபக் ஹூடா 55 பந்துகளில் சதம் அடித்து பட்டையை கிளப்பினார்.
55 பந்துகளில் 100-ஐ தொட்ட தீபக் ஹூடா.. அயர்லாந்து அணியை ஓடவிட்டு இந்திய வரலாற்று சாதனை!!
Published on
Updated on
2 min read

அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங் தேர்வு செய்தது.. இதை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணி 12 ஓவரில் 108 ரன்கள் எடுத்தது.. என்ன டா.. டி20 மேட்ச் 12 ஓவரில் முடிந்து விட்டது என யோஷிகீற்களா?.. மழை காரணமாக மேட்ச் 12 ஒவேரில் முடிந்து விட்டது..

இதை தொடர்ந்து இந்திய அணி களமிறங்கியது. ஓபனிங் பேட்ஸ் மேன் இசான் கிசான் மற்றும் தீபக் ஹூடா நல்ல தொடக்கம் கொடுத்தனர். இஷான் கிஷன் 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் டக்அவுட் ஆனார். ஹர்திக் பாண்டிய 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். தீபக் ஹூடா கடைசி வரை நின்று 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.

நேற்று 2-வது டி20 போட்டி டப்ளினில் நடைபெற்றது.. முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங் தேர்வு செய்தது.. இரண்டவது போட்டியிலும் டாஸ் வென்ற இந்திய அணி போன மேட்ச் போலவே பௌலிங் தான் தேர்வு செய்யும் என்று எண்ணி கொண்டு இருந்த நேரத்தில் பேட்டிங் தேர்வு செய்தது..

தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் இசான் கிசான் களத்தில் இறங்கினர். சஞ்சு சாம்சன் பொறுப்பாக விளையாடி ஆட்டத்தை கொண்டு சென்றார். ஆனால், இசான் கிசான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்ற போது 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா ஆகியோர் சரிந்து கிடைக்கும் அணியை தூக்கி கிடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். தீபக் ஹூடா 14 ரன்கள் எடுத்திருந்த போது நடுவர் அவுட் தர, டிஆர்எஸ் முடிவில், அது நாட் அவுட் என அறிவிக்கப்பட்டது.

இதன் பிறகு என்ன உத்வேகம் வந்ததோ என்று தெரியவில்லை.. தீபக் ஹூடா ஒரு காட்டு காட்ட தொடங்கினார். 27 பந்துகளில் அரைசதம் அடித்தார்.  அதேபோல், சஞ்சு சாம்சன் 31 பந்துகளில் தனது அரைசத்தை எட்டினார். ஒருபுறம் தீபக் ஹூடா சிக்ச்சர் சிகிச்சராக அடிக்க.. மறுபுறம் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அசத்தி ஆட்டமிழந்தார்.. இந்த பார்ட்னர்ஷிப் 176 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தது. இதையடுத்து சூர்யகுமார் யாதவும் 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 21 முறை 200 ரன்கள் எடுத்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.

இதனையடுத்து, 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, வெற்றிக்காக கடுமையாக போராடியது. முடிவில், 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் மட்டுமே எடுத்து அந்த அணி தோல்வியை தழுவியது. இதன்மூலம், 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட தீபக் ஹுடாவுக்கு, ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com