ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டம் வென்றது தென்கொரியா..!

ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் மலேசியாவை வீழ்த்தி தென்கொரியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டம் வென்றது தென்கொரியா..!
Published on
Updated on
1 min read

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் தென்கொரியா - மலேசியா அணிகள் மோதின. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், தென்கொரிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் மலேஷியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம், 5வது முறையாக ஆசிய கோப்பையை வென்று தென்கொரியா சாதனை படைத்துள்ளது.

முன்னதாக, வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில், இந்தியா - ஜப்பான் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com