7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சார்ஜாவில் நடைபெற்ற சூப்பர்-12 சுற்றில் ஸ்காட்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, பேட்டிங் தேர்வு செய்து முதலில் விளையாடியது. தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்தது. ஆப்கானிஸ்தான் அணியினரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், ஸ்காட்லாந்து அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 10 புள்ளி 2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஸ்காட்லாந்து அணி, 60 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 130 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.