என்னது...? கூடவே வந்த நிழல காணோமா..? கொடைக்கானலில் ஆச்சர்ய நிகழ்வு...!

என்னது...?   கூடவே வந்த நிழல காணோமா..?  கொடைக்கானலில் ஆச்சர்ய நிகழ்வு...!
Published on
Updated on
1 min read

கொடைக்கானலில் இன்று நிழல் இல்லாத நாள் ...12.20 மணிக்கு ஆரம்பித்து சில வினாடிகள் மட்டும் தொடர்ந்தது.... ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு...

நிழல் என்பது நம்மை எல்லா நாளும் பின்தொடரும் என்பது இயல்பான அறிவியல் நிகழ்வுதான்.  ஆனால் இந்த நிழல் வருடத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் ஒரு சில மணித்துளிகள் நம்மை பின் தொடராது. 

 இந்த அறிவியல் நிகழ்வு கொடைக்கானலில் இன்று நடைபெற்றது சரியாக 12.20 மணிக்கு ஆரம்பித்த இந்த நிழல் இல்லாத நிமிடங்கள் சில வினாடிகள் மட்டும் தொடர்ந்து இதற்காக கொடைக்கானல் வானியற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது... 

நிழல் இல்லாத நாளைக்  கண்டு கழிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வானியற்பியல் ஆராய்ச்சி நிலையத்திற்கு வந்து பார்வையிட்டு வியந்தனர் . இன்று சூரிய வெளிச்சம் சரியாக 10 டிகிரி 13 வரும் இதனால் இந்த டிகிரி அட்சரேகையில் உள்ள கொடைக்கானல் பகுதிகளில் சூரியன் தலைக்கு நேர் மேலே வரும். அப்போது தான் இந்த நிழலில்லாத நிகழ்வு ஏற்படும் என்பது குறிப்பிடதக்கது..

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com