இந்தியாவின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது நாட்டிற்கே பேரிழப்பாக அமைந்துள்ளது. தலைமுறை தலைமுறையாய் ராணுவ பணியாற்றும் குடும்பத்தில் பிறந்து அவர் கடந்து வந்த பாதை நீண்டது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகெ நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.