குற்றாலத்தில் களைகட்டும் அரிய வகை பழங்கள் விற்பனை!!

குற்றாலத்தில் களைகட்டும் அரிய வகை பழங்கள் விற்பனை!!
Published on
Updated on
2 min read

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் காலங்களில் விற்பனைக்கு வரும் அரிய வகை மருத்துவ குணம் கொண்ட பழங்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்வதால் விற்பனை களை கட்டியுள்ளது.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் சீசன் காலமாகும். இந்த காலங்களில் நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வார்கள். இந்த வருடம் சீசன், ஒரு மாதம் காலதாமதமாக தொடங்கியுள்ளது. தற்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவு காணப்படுகிறது.

இந்த சீசன் காலங்களில், குற்றாலம் பகுதிகளில் தற்காலிக கடை அமைத்து, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் விளையக்கூடிய அரிய வகை, மருத்துவ குணம் கொண்ட, ரம்டான், மங்குஸ்தான், துரியன் பழம், முட்டை பழம், நாவல் பழம், வால் பேரிக்கா, பேரிச்சம்பழம், மலை சித்தாப்பாலம், பன்னீர் கொய்யா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பழ வகைகள் விற்பனை செய்யப்படும். இந்த பழங்கள் கேரளாவிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் விளையக்கூடிய பழங்களாகும். 

தற்போது, சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால், அவர்கள் அனைவரும் இந்த பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

ஒரு கிலோ ரம்டன் பழம் 150 ரூபாய்க்கும், மங்குஸ்தான் பழம் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், வால் பேரிக்கா ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், ஸ்டார் ஃப்ரூட் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com