நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசையும், தமிழ்நாடு ஆளுநரையும் கண்டித்து, திமுக சார்பில் இன்று மதுரையை தவிர மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவி அண்மையில் நீட் தோ்வு குறித்து மாணவா்கள் மற்றும் பெற்றோா்களிடம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் வைத்து ஆலோசனை நடத்தினாா். அப்போது பேசிய அவா் இனி எக்காரணத்தை கொண்டும் நீட் தோ்வு விலக்கு மசோதாவில் கையெழுத்து இடமாட்டேன் என தொிவித்திருந்தார்.
இந்நிலையில் அதற்கு அடுத்த நாளே குரோம்பேட்டையில் நீட் தோ்வில் தோல்வியடைந்த மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். இதில் துக்கம் தாழாமல் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் நீட் தோ்வு விலக்கு குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி மாநிலம் முழுவதும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்தது. அதன்படி இன்று மாநிலம் முழுவதும் திமுகவினா் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளனா். அதன்படி சென்னை வள்ளுவா் கோட்டத்தில் நடைபெறவுள்ள போராட்டத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கண்டன உரையாற்றவுள்ளாா்.
இதற்கிடையே மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளதால் மதுரையில் நடைபெற இருந்து ஆா்ப்பாட்டம் வரும் 23-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க || அதிமுக எழுச்சி மாநாடு...பிரமாண்டமான ஏற்பாடுகள்!