காவலர் மகளுக்கு 2 கோடி சம்பளம்,.. இதை படித்தால் இத்தனை கோடி சம்பளமா.?

காவலர் மகளுக்கு 2 கோடி சம்பளம்,.. இதை படித்தால் இத்தனை கோடி சம்பளமா.?

ஹைதராபாத் காவல்துறையில் தடயவியல் நிபுணராக பணியாற்றி வருபவர் வெங்கண்ண. இவரது மகள் தீப்தி நர்குட்டி. ஹைதராபாத் உஸ்மானியா பொறியியல் கல்லூரியில் தனது பொறியில் படிப்பை முடித்த இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். அதன்பின் உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற இவர் அங்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் உதவி தொகையோடு உயர்கல்வியை நிறைவு செய்தார் .

அதன்பின் அதே பல்கலைக்கழகத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய காம்பஸ் இன்டெர்வியூவில் பங்கேற்றார். அதில் தேர்வு செய்யப்பட்ட அவருக்கு வருடம் 2 கோடி ரூபாயை சம்பளமாக வழங்கவுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். உயர் கல்விக்காக கல்லூரியில் படித்த போதே இவரது திறமை பரவலாக பேசப்பட்டுள்ளது. இவரின் திறமையை அறிந்த அமேசான், கோல்ட்மேன் போன்ற நிறுவனங்கள் இவருக்கு வேலை கொடுக்க முன்வந்துள்ளன என்றும் அதை அவர் நிராகரித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.